
ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.500 ஆக குறைக்கப்படும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 500 க்கு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ராகுல் காந்தி முன்னிலையில் இந்த அறிவிப்பை அசோக் கெலாட் வெளியிட்டார். மேலும் பாஜகவை விமர்சித்த அசோக் கெலாட் கூறியதாவது, அடுத்த மாதம் பட்ஜெட்டிற்கு நான் தயாராகி வருகிறேன்.

தற்போது ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு பிரதமர் மோடி சிலிண்டர் வழங்கி வருகிறார். ஆனால், இவை அனைத்து காலியாகவே உள்ளன.உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை ரூ.500க்கும் நாங்கள் வழங்குவோம் என்றார்.
தமிழகத்தில் தற்போது, ரூ.1090-க்கு மேல் சில மாவட்டங்களில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.