
பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு பெறவேண்டும் எனவும் , பொதுமக்களின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
முகாமில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து வாரந்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு வரும் அச்சம் தவிர்க்கப்படும் என்றும், காவலர்கள் உடனான நல்லுறவு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in