
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை சி.என்.கிராமத்தைச் சேர்ந்த சங்கர், தனது நண்பர்களான கார்த்திகேயன், லெனின், வெங்கடேஷ் ஆகியோருடன் காரில் பழைய குற்றால அருவிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார் திடீரன கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காயம் அடைந்த கார்த்திகேயன், லெனின், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in