பொங்கல் பண்டிகைக்கு 500 ரூபாய் மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பச்சரிசி, வெல்லம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கூறுகையில், ‘பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
இதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது’ என்று கூறினார்.