ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று எலான் மஸ்க் ட்விட்டரில் கருத்துக்கணிப்பை நடத்தினார். எதிர்பார்த்தது போலவே அவர் பதவி விலக வேண்டும் என்று கருத்துக் கணிப்புகள் வந்தன. இருப்பினும், அதை எலான் மஸ்க் ஏற்க மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக யாரையாவது கண்டறிந்தவுடன், சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். எனவே மஸ்க்கிற்கு தற்போது நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஆனால் தனது இடத்தை நிரப்பும் அளவுக்கு முட்டாள் யாரையாவது கண்டவுடன் வெளியேற திட்டமிட்டுள்ளார். மேலும், மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களுக்கு தலைவராக இருக்கப் போவதாகவும் எலான் மஸ்க் கூறினார்.
மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அவரை வியப்பில் ஆழ்த்தியது. கருத்துக்கணிப்பின்படி, 57.5 சதவீத ட்விட்டர் பயனர்கள் மஸ்க் பதவி விலகுவதற்கு வாக்களித்துள்ளனர், அதே நேரத்தில் 42.5 சதவீதம் பேர் அவர் தலைவராக தொடரலாம் என்று விரும்புகிறார்கள். முடிவுகள் வெளியானவுடன், மஸ்க் மீண்டும் வாக்கெடுப்பை நடத்துவதாகக் கூறினார்.
இந்தநிலையில் மஸ்க் சமீபத்தில் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி டுவிட்டரில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் டுவிட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று பதிலளித்தனர். இதனால் இந்த கருத்துக்கணிப்பு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டுவிட்டர் கருத்துக் கணிப்புகளுக்கு மஸ்க் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.