சானியா மிர்ஸா என்ற இஸ்லாமிய இளம்பெண் இந்திய விமானப்படையில் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே ஜசோவர் கிராமத்தை சேர்ந்த சானியா மிர்சா என்ற இளம்பெண் சிறுவயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தீவிரமாக படித்துள்ளார்.
இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி., மெக்கானிக். வளர வளர போர் விமானியாக வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. அதற்காக முழு ஈடுபாட்டுடன் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தீவிரமாக படித்தார்.
இந்தி வழியில் கல்வி பயின்ற இவர் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அதன் பிறகு, குருநானக் பெண்கள் கல்லூரிக்கு சென்றார். இவர் தனது ரோல் மாடலாக இந்தியாவின் முதல் பெண் போர் விமானி அவ்னி சதுர்வேதியை எடுத்துக் கொண்டார்.
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தயாராகி வந்த இவர், அண்மையில் நடைபெற்ற தேர்வில் 149ஆவது ரேங்க் எடுத்து சாதனை படைத்தார். மொத்த உள்ள 400 இடங்களில், போர் விமானி பிரிவில் பெண்களுக்கு 2 இடம் இருந்தது.
அதில் ஒருவராக வந்து அசத்தியுள்ளார் சானியா மிர்சா. இவர் புனேவில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் வரும் 27ஆம் தேதி இணைய உள்ளார். தங்களது மகள் குடும்பம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கிராமத்தையும் பெருமைப்படுத்தியுள்ளதாக சானியா மிர்சாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
newstm.in