சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 40,608 ருபாயாகவு, ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 14-ம் தேதி ஒரு சவரன் தங்கம் 40,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 5,076 ரூபாயாக விறப்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 40,608 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்: சென்னையில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாயாகவும், ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.