
சுரங்கம் தோண்டி எஸ்பிஐ வங்கி கிளையில் சுமார் 1.8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பஹ்தி என்ற பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கிக்கு வழக்கம்போல், ஊழியர்கள் பணிக்கு சென்றபோது வங்கி உள்ளே ஓட்டை போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
லாக்கரில் பார்த்தபோது, அங்கே நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான 1.8 கிலோ தங்கம் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் வங்கியின் பின்புறத்தில் உள்ள காலி நிலத்தில் இருந்து சுமார் 10 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டி வங்கிக்குள் நுழைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் இதற்காக கேஸ் கட்டரை பயன்படுத்தியுள்ளனர். பணத்தையும் கொள்ளையடிக்க முயன்றபோது அது முடியாததால், நகைகளை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சில கைரேகைகளை எடுத்து அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ள போலீஸார், குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
newstm.in