
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மதுரையில் சில இடங்களில் நாளை (26.12.2022) மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி, ஆரப்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புட்டு தோப்பு, ஒய்.எம்.எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன் நகரம், மணி நகரம், பேச்சியம்மன் படித்துறை, வக்கீல் புது தெரு, அகிம்சா புறம், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அரசரடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஹார்வி நகர் ஞான ஒளிபுறம், இ.எஸ்.ஐ, பொன்னகரம், பாண்டியன் நகர், செம்பட்டிபுரம், விராட்டிபத்து, அசோக் நகர், டோக் நகர், எஸ்.எஸ்.காலனி, சம்பட்டிபுரம், பொன்மினி போன்ற பகுதிகளிலும் மின் தடை ஏற்படும்.

மேலும், மீனாட்சி அம்மன் கோவில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான, தெற்காணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழமாசி வீதி, சிம்மக்கல், யானைகல் போன்ற பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். மின்தடை அறிவிப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்துகொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
newstm.in