
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பல வகைகள் உள்ளன. உயரமான ரயில் நிலையம், பரபரப்பான ரயில் நிலையம், புராதன சின்னம் போன்ற ரயில் நிலையம், உலக சாதனை படைத்த ரயில் நிலையம், முதல் ரயில் நிலையம் என பல வகைகள் இருக்கின்றன.
இதில், இந்தியாவிலேயே வியப்பூட்டும் ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அதுதான் நவாப்பூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் ஒரு பகுதி குஜராத்துக்கும், மற்றொரு பகுதி மகாராஷ்டிராவுக்கும் சொந்தமானது.

இரண்டு மாநிலங்களைப் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ளந்த நவாப்பூர் ரயில் நிலைய நடைமேடையின் நடுவில் ஒரு வெள்ளைக்கோடு போடப்பட்டிருக்கும். கோட்டின் நடுவில் இரும்பிலான ஒரு இருக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பக்கம் குஜராத் என்றும் மறுபக்கம் மகராஷ்டிரா என்றும் அம்புக்குறி வரையப்பட்டிருக்கும். இதேபோன்று இன்னொரு ரயில் நிலையமும் இருக்கிறது. அது, மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் வழியில் உள்ள பவானி மண்டி ரயில் நிலையம். இதன் ஒருபகுதி ராஜஸ்தானிலும் மற்றொரு பகுதி மத்தியப் பிரதேசத்திலும் அமைந்துள்ளது.

newstm.in