
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.