காட்மாண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக பிரசண்டா புஷ்பா கமல் தாஹல் பதவியேற்றார். பிரசண்டாவுக்கு நேபாள நாட்டின் ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேபாள கம்யூனிஸ்ட்(மாவோயிஸ்ட்) கட்சித் தலைவரான பிரசண்டா 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
