
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என்று கூப்பர் மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்( 34) கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
ஆனாலும் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை எழுந்தது. மும்பை போலீசார் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வந்தனர். சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

சுஷாந்த் சிங் வழக்கை மத்திய அரசு அதிரடியாக சி.பி.ஐ.க்கு மாறியது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என்று கூப்பர் மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர் கூறியிருக்கிறார்.
சுஷாந்த் சிங்கின் கழுத்திலும் உடலின் பிற பாகங்களிலும் காயங்கள் இருந்தன என்பதால் அது தற்கொலை அல்ல, கொலை என உடலை பார்த்தவுடனேயே தன்னால் ஊகிக்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.

விதிகளின்படி பிரேத பரிசோதனையை வீடியோ எடுத்திருக்க வேண்டும். ஆனால் மேலதிகாரி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு உடலை போலிசிசிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டார் என அவர் கூறி உள்ளார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in