வரும் 30ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ,
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும். ஒரு நாளைக்கு 300 டோக்கன் வீட்டிற்கு சென்று வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.
மேலும் கரும்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் எனவும் கூறினார்.