
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் விதிமீறல் இருந்தால் சீல் வைக்கப்படும். புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் கடந்த காலங்களை போல் அனுமதிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதிய கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்த சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு பெற முடியும். அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானம் கட்ட உரிமையாளர் கூறினாலும் பொறியாளர் அனுமதிக்ககூடாது.
அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில், அக்கட்டிடம் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தார்.