மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை இது தான்…!!

சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில், மரபணு மாற்றமடைந்த ‘பிஎப் 7’ வகை கொரோனா, அதிகளவில் பரவி வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணியருக்கு, கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை, மீண்டும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது.பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த 23ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.இந்த ஒப்புதல் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே வழங்கப்பட்டது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியும், மருத்துவமனை கட்டணமும் வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக அனைத்து கட்டணங்களையும் சேர்ந்து ரூ.1000 வரை செலவாகும் என கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 325ஆக விலை நிர்ணயம்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தடுப்பு மருந்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஜனவரி 26 த்திக்குள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.