
கொரோனா பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் முடிவை டெல்லி அரசு திரும்பப்பெற்றது.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருபவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களை டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டது.

டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 வரை, 85 ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர் ஊழியர்கள் டெல்லி விமான நிலையத்தில் வெவ்வேறு நேரத்தில் பணியில் அமர்த்தப்பட்டுவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிப்பு கிளம்பியது. இதையடுத்து, தற்போது இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட நிரவாகம் தெரிவித்துள்ளது.
newstm.in