சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்றுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல -மகரவிளக்கு பூஜைக்காக நவம்பா் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாள் மண்டலம் நேற்றுடன் நிறைவடைந்து மண்டல பூஜை நடைபெற்றது.

மண்டல பூஜையையொட்டி 453 பவுன் கொண்ட ஐயப்பனுக்கான ‘தங்க அங்கி’ கோயிலை அடைந்தது. அதற்கு திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரும் பக்தா்களும் கோயில் நிா்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

நேற்று முன்தினம் மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று பகல் 12.30 முதல் 1 மணிவரை ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷத்துடன் மண்டல பூஜை நடைபெற்றது.

மண்டல பூஜை நிறைவடைந்த நிலையில், 3 நாள்களுக்கு கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. அன்று மகரஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஜனவரி 20ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

அத்துடன் மண்டல-மகரவிளக்கு வழிபாட்டுக் காலம் முடிவுக்கு வரும். கோயிலுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியதில் இருந்து சுமாா் 30 லட்சம் பக்தா்களின் வருகை மூலமாக ஐயப்பன் கோயிலுக்கு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தா்கள் வருகை குறைவாகக் காணப்பட்டது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் பக்தா்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.