உத்தரப் பிரதேசத்தின் காவல் நிலையத்தில் ஐஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டா பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் மாவட்டம் கலிலாபாத் காவல் நிலையத்தில் ஐஜி ஆர்.கே.பரத்வாஜ் திடீர் ஆய்வுக்குச் சென்றார். அப்போது, அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியில் தோட்டாவை பொருத்தி காட்டுமாறு கூறினார்.
அப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர், துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த முடியாமல் தடுமாறினார். மெலும், தோட்டா வெளியேறும் குழாய் வழியாக தோட்டாவை பொருத்த முயன்றார். மேலும் பல போலீஸ்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த முடியாமல் தோல்வியடைந்தனர்.
புறக்காவல் பொறுப்பு அதிகாரி, கண்ணீர் புகை குண்டு துப்பாக்கியை பலமுறை முயற்சி செய்தும் அவரால் இயக்க முடியவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எந்த நேரமும் அவசர நிலை உருவாகலாம் என்பதால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுமாறு போலீசாருக்கு ஐ.ஜி அறிவுறுத்தினார்.