
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் (06042) ஜனவரி 16 நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு நெல்லை சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் நெல்லை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06022) நெல்லையிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் வரும்.

திருவனந்தபுரம் கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறு மார்க்கத்தில் தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in