தமிழக முதல்வர் திருச்சி மாவட்டத்திற்கு நாளை 29-ம் தேதி வருகைதர உள்ளார். நாளை காலை சுமார் 9.30 மணியளவில் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகின்றார். அங்கிருந்து கார் மூலம் அண்ணா விளையாட்டரங்கம் வருகை புரிந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியும், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கியும், முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங் கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள காகித ஆலையில் ரூ.1,350 கோடி யில் புதிதாக கட்டிய 2ம் அலகு மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறியுள்ளார்.