
இந்திய வரலாற்று பேரவை மாநாட்டின் 81-ம் ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பங்கேற்று விட்டு மு.க.ஸ்டாலின் புறப்பட தயாரான நிலையில், மேயர் வசந்தகுமாரி பிறந்து 3 மாதங்களே ஆன தனது ஆண் குழந்தையை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து குழந்தைக்கு பெயர் வைக்க அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
குழந்தையை வாங்கி கொண்ட அவர், ‘திராவிட அரசன்’ என பெயர் சூட்டினார்.