பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து டிசம்பர் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு ரயில் செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் வரை இயக்கப்படுகின்றன. அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், காலி பெட்டிகளை இயக்கி ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
ஆனால் மேலும் பணிகள் இருப்பதால் டிசம்பர் 31ஆம் தேதி வரை பாம்பன் பாலத்தில் ரெயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in