
இந்தியாவில் ஜனவரி மாதத்தின் மத்தியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது எனவும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக அளவில் கொரோனா பரவல் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கமடைந்து வருகிறது.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து உலக நாடுகள் ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இது கடந்த காலங்களில் இந்தியாவில் கோவிட் பரவலின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவர் பாதிக்கப்பட்டால், 16 பேருக்கு பரவக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் பிற பல நாடுகளில் கொரோனா கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மற்றொரு அலைக்கு பயந்து சுகாதார வசதிகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை வைத்துள்ளன.
newstm.in