சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி: புத்தாண்டு பிறக்கு நாளில் இரவு நேரத்திலும் கண்காணிக்கக் கூடிய டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ள முடிவு; உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 7 மணியிலிருந்து சென்னை காமராஜர் சாலையில் அனுமதி இல்லை என்று கூறினார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.
சொகுசு விடுதிகளுக்கு கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டது காவல்துறை.
- விடுதிகளில் 80 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி கிடையாது.
- அனைத்து விடுதிகளிலும் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு.
- பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
- இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் கூடாது
- அதிகமான போதையில் இருக்கும் நபர்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது என காவல் துறை அறிவித்துள்ளது.