ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் கேரியரை கவனிக்க முடியவில்லை

தமிழ் சினிமாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். கடந்த 2007ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலே விருதையும் பெற்றார். அதன்பிறகு ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை பெற்றார். இதையடுத்து ‘எங்கேயும் எப்போதும்’, ‘இறைவி’ பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள அஞ்சலி, தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் தற்போது தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தில் நடித்த அஞ்சலிக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் அஞ்சலி ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தனக்கு நண்பராக அறிமுகமான ஜெய்யுடன் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘பலூன்’ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்த போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான சில புகைப்படங்களையும் இருவரும் வெளியிட்ட நிலையில், பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது.

மேலும் இடைப்பட்ட காலத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சரிவர திரையுலகில் கவனம் செலுத்தாமல், நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. இதற்க்கு காரணம் தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பது தான் என சில கிசுகிசு எழுந்த நிலையில், தற்போது முதல் முறையாக. டாக்சிக் ரிலேஷன் ஷிப் குறித்து ஊடகம் ஒன்றிக்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்றும், நடிகை அஞ்சலி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபர் யார் என்பதை அஞ்சலி கூற மறுத்துவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.