பாங்காக்கில் இருந்து கொல்கத்தா சென்று கொண்டிருந்த விமானத்தில் இந்திய பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாங்காக்கில் இருந்து கொல்கத்தா நோக்கி தாய்லாந்து விமானம் சென்று கொண்டு இருந்தது. தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் ஆகும் இது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இரண்டு இந்தியர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
ஒரு இந்தியர் தன்னுடைய பேக்கை நடைபாதையில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை இன்னொருவர் மிதித்துள்ளார். இதில் தான் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட காரணமாக இருந்தது. இரண்டு பேரும் மாறி மாறி இந்தியில் கத்தி சண்டை போட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் கெட்ட வார்த்தையில் மாறி மாறி கத்தி வசைபாடிக்கொண்டிருந்தனர். இதில் ஒரு நபருக்கு உதவியாக அவரின் நண்பர்கள் வந்ததும் மோதல் கைமீறி சென்றுள்ளது.
மூன்று பேர் சேர்ந்து கொண்டு ஒருவரை சரமாரியாக திட்டி உள்ளனர். பதிலுக்கு இந்த நபரும் மாறி மாறி கடுமையாக திட்டி உள்ளார். இதையடுத்து விமான பணிப்பெண் ஒருவர் வந்து இவர்களை சமாதானம் செய்ய முயன்று உள்ளார். இரண்டு பேரையும் அமைதிப்படுத்த முயன்று உள்ளனர்.
ஆனால் இவர்கள் விமான பணிப்பெண்ணை பேச்சை கண்டுகொள்ளாமல் மாறி மாறி கத்திக்கொண்டே சென்றுள்ளனர். இந்த விவகாரம் கைமீறி போகவே ஒருவர் இன்னொருவரை போட்டு சரமாரியாக அடித்துள்ளார். இன்னொரு நபர் திருப்பி அடிக்காமல் தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் இவர் விடாமல் அந்த நபரை போட்டு சரமாரியாக தாக்கி உள்ளார்.
அவரின் நண்பர்களும் அவருடன் சேர்ந்து கொண்டு விடாமல் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். நடுவில் விமான பணிப்பெண் இவர்களை தடுக்க கடுமையாக முயன்றும் அவராக் முடியவில்லை. இன்னொரு விமான பணிப்பெண் இந்த மோதலை விமானிக்கு தகவலாக போன் மூலம் தெரிவித்து உள்ளார்.
இவர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்டு சண்டை போட்ட சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.
newstm.in