
பாலிவுட் திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் காலமானார். அவருக்கு வயது 62.
‘போல் ராதா போல்’, ‘லாட்லா’, ‘ரெடி’, ‘பூத்’ ஆகிய ஹிட் படங்களை தயாரித்தவர் நிதின் மன்மோகன். இவர், கடந்த 3-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு நவி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு, பல உடல்நலச் சிக்கல்களுடன் போராடி வந்த நிதின் மன்மோகன், இன்று காலை 10 மணியளவில் காலமானார். இந்தத் தகவலை அவரது மகள் கூறினார். நிதின் மன்மோகன் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.