இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக மத்திய மாநில அரசுகள் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவிடவேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த இணையதள பதிவேற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கும் என கூறியுள்ளார். மேலும் 2023-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் சர்வதேச பயணிகள் 72 மணி நேரத்துக்கு முன்பு இந்த ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் ரெண்டாம் அடிப்படையில் 2% இந்திய விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த குறிப்பிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.