இயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் நடத்தப்படும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியின் முதல்நாள் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
நீலம் பண்பாட்டு மையம் சார்பாக சென்னை சர் முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் நிகழ்வு நடைபெற்றது.
அதில், மலைவாழ் கலைஞர்களின் பாரம்பரிய ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி களைகட்டியது. கலையும், மார்கழி மாதமும் குறிப்பிட்ட மக்களுக்கானது அல்ல, அனைவருக்குமானது என்பதை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சாத்தியப்படுத்தி உள்ளது.
இது போன்ற பெரிய மேடையில் தங்களது நாட்டுப்புற கலையை அரங்கேற்றுவது நினைத்துகூட பார்க்க இயலாத கனவு என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் கூறியுள்ளனர்.
அதே போல் இன்றும், நாளையும் மிக முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி தொடங்கும் முன் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் என்றாலே சபாக்களில் அனுமதி மறுக்கப்படுவதாக கவலை தெரிவித்தார்.
newstm.in