
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பிரபல உணவகத்திற்கு ஆகாஷ் துபே என்பவர் சாப்பிட வந்தார். அவர் உணவக ஊழியரிடம் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவில் எலும்புத் துண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவர் தவறுதலாக வந்து விட்டது என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் ஆகாஸ் துபே இது குறித்து விஜய் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை அடுத்து உணவகத்தின் மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராட்டி என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
newstm.in