
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரையின்படி தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சொகுசு விடுதிகளுக்கு கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டது காவல்துறை.
- விடுதிகளில் 80 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்”
- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி கிடையாது.
- அனைத்து விடுதிகளிலும் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு
- பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்”
- இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் கூடாது
அனைத்து நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு ரிசார்ட்கள் இருக்கும் பகுதிகளில் இரவு நேர போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.மது போதையில் யாராவது பிரச்சினை செய்தால் காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.அதிகமான போதையில் இருக்கும் நபர்களுக்கு அனுமதி கிடையாது என காவல் துறை அறிவித்துள்ளது.