
திண்டுக்கல் மாவட்டம் கூத்தம்பூண்டி கிராமம், கருமாங்கிணறைச் சேர்ந்த அருண்குமார் (24) என்ற பட்டதாரி இளைஞர் தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.
இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 50 ஆயிரம் பணத்தை இழந்ததால் தாயும், பாட்டியும் கண்டித்தனர். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.
இதுகுறித்து அருண்குமாரின் தாய் அளித்த புகாரின்பேரில், கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், கருமாங்கிணறு பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் அருண்குமாரின் சடலம் மீட்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகம் முழுவதும் தொடர்கிறது. ஆனால், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வருகிறார்.
newstm.in