
உத்தராகண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தராகண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது கார் சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், சீட் பெல்ட் போடாமல் பண்ட் காரை ஓட்டியது தெரியவந்துள்ளது. மேலும், அதிவேகத்தில் வந்த அவர், தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்து கம்பத்தில் மோதி சுமார் 200 மீட்டர் தூரத்தில் விழுந்து பற்றி எரிந்தது. இதனால் அவர் காரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்துள்ளார். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
newstm.in