நடிகை துனீஷா வழக்கில் புதிய திருப்பம்…! சிக்கும் நடிகர்…

நடிகை துனீஷா மரண வழக்கில் ஷீஜன் கானுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், சாட்டிங் தகவல் அழிக்கப்பட்டு உள்ளது என்றும் நீதிமன்றத்தில் காவலர்கள் தெரிவித்தனர்.

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல இளம் நடிகை துனீஷா சர்மா . கடந்த 24-ந்தேதி அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது சக நடிகர்கள், கலைஞர்களுடன் ஒன்றாக உணவு சாப்பிட்ட அவர், திடீரென படப்பிடிப்பு தளத்தில் தூக்கு போட்டு உயிரிழந்தார்.

அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டினார் என்று அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சக நடிகரான ஷீஜன் கான் என்பவரை வாலிவ் நகர போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் துனீஷா மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, 15 நாட்கள் பிரிவுக்கு பின்னர் துனீஷாவை மரணத்திக்கு இட்டு சென்றது எது?, இருவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது பற்றி கண்டுபிடிக்க இருவரின் மொபைல் போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இதனிடையே வழக்குடன் தொடர்புடைய 27 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என காவலர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகர் ஷீஜன் கானின் காவல் இன்றுடன் நிறைவடைகிற சூழலில் அவரை வாலிவ் காவலர்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் 5 நாட்கள் விசாரணை காவலுக்கு அனுமதி கோரப்பட்டது. அப்போது,நடிகர் ஷீஜன் கானுக்கு, நடிகை துனீஷா தவிர்த்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்று காவலர்கள் தெரிவித்தனர். துனீஷா மரண வழக்கில் கைது செய்யும்போது, கான் தனது மொபைல் போனில் பல்வேறு சாட்டிங் செய்த தகவல்களை அழித்து உள்ளார் என்றும் காவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

விசாரணையின்போது, முறையாக அவர் ஒத்துழைக்கவில்லை என்றும், ரகசிய காதலியுடனான சாட்டிங் பற்றி கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக தகவல்களை மாற்றி, மாற்றி கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளனர். அழிக்கப்பட்ட பல சாட்டிங் தகவல்கள் மீண்டும் கிடைத்தபோது, அதில் பல பெண்களுடன் நடிகர் ஷீஜன் பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.

நடிகரின் மொபைல் போனில் பல முக்கிய சாட்டிங் தகவல்கள் உள்ளன என்றும் நீதிமன்றத்தில் காவலர்கள் தெரிவித்தனர். மேலும் துனீஷாவுடனான உறவை முறித்து கொண்ட பின்பு, அவரை கான் தவிர்க்க தொடங்கியுள்ளார். துனீஷா தொடர்ச்சியாக மெசெஜ் செய்து வந்துள்ளார். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் அவர் தவிர்த்து வந்துள்ளார் கூறப்படுகிறது.

இதனிடையே துனீஷாவை, ஷீஜன் கன்னத்தில் அறைந்துள்ளார் என்று அவரது தாயார் கூறியுள்ளார். இந்த வழக்கில், நடிகர் ஷீஜன் கானுக்கு 14 நாட்கள் விசாரணை அனுமதி அளித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.