ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விருமன் பட பாணியில் காதல் ஜோடி பைக்கில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்குநகர் பகுதியில் விருமன் பட பாணியில் ஒரு இளைஞர் தன்னுடைய காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து கட்டி அணைத்தபடி சாலையில் சென்றுள்ளார்.
இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பைக்கில் கட்டி அணைத்தபடி சென்ற காதல் ஜோடி அஜய் குமார் (22) மற்றும் சைலஜா (19) என்பது தெரிய வந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகளின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கினர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அஜய்குமார் மற்றும் சைலஜாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in