‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து மொத்தம் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கி உள்ளார்.
அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தp படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்ததையடுத்து, வசூலை பாதித்தது. தமிழகத்தில் இப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிட்டிருந்த நிலையில், விநியோகஸ்தருக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கி உள்ளார். இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனை ஈடுகட்டும் விதமாக சிவகார்த்திகேயன் ரூ.3 கோடி, தயாரிப்பு நிறுவனம் ரூ.3 கோடி என மொத்தம் ரூ.6 கோடி நஷ்ட ஈடாக வழங்கி உள்ளனர்.