சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – அஜித் படங்கள் பொங்கலுக்கு நேருக்கு நேர் களம் காண்கின்றன. அண்மையில் துணிவு ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது வாரிசு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இரு படங்களின் குழுக்களும் அப்டேட்களை போட்டி போட்டிக் கொண்டு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பொங்கலுக்காக அஜித் – விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது அஜித் – விஜய் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படம் ஒரு சில திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சென்னையிலுள்ள AGS சினிமாஸில் 6 முதல் 10ஆம் தேதி வரை இப்படம் வெளியாகிவுள்ளதாக ‘புக் மை ஷோ’ ஆப்பில் தெரியவந்துள்ளது.
ஜானகி செளந்தர் இயக்கத்தில் அஜித், விஜய், இந்திரஜா, வடிவேலு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படம், கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது.
இளையாராஜா இசையில் உருவான இப்படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள திரையரங்கில் வாரிசு – துணிவு படங்களை வெளியிட 50 – 50 சதவீதம் திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in