
ஜப்பானின் தலைநகர் டோக்கியோ நகரில் மட்டும் சுமார் 3 கோடியே 74 லட்சம் மக்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர்ந்து அங்கு மக்கள் அதிக அளவில் குடியேறிவருகின்றனர்.
இதன் காரணமாக ஜப்பான் அரசால் மக்களுக்கு தேவையான குடிநீர், இருப்பிடம் போன்றவற்றை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நகரின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதை கட்டுப்படுத்தும் வகையில் டோக்கியோவை விட்டு வெளியேறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் யென் (இந்திய மதிப்பில் ரூ.6.35 லட்சம்) வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை வரும் ஏப்ரல் மாதம் முதல் கொடுக்கப்படவுள்ளது.
கடந்த 2019ம் முதலே அதிக முதியோர் வாழும், குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நகரங்களில் மக்களை குடியமர்த்தும் பணியை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.