கடுமையான குளிர் காரணமாக டெல்லியில் தனியார் பள்ளிகள் அடுத்த வாரம் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இம்முறை கடுமையான குளிர் நிலவுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வி இயக்குநரகம் ஆலோசனை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் டெல்லியில் தொடர்ச்சியாக நிலவும் குளிர் அலையை அடுத்து, அனைத்து தனியார் பள்ளிகளையும் வரும் 15ஆம் தேதி வரை மூட அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 8ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டு, நாளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடும் பனி மூட்டத்துடன் கூடிய குளிர் அலையால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் மூடுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
newstm.in