கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் கலவரம்… போலீஸ் குவிப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த சங்கர், சிவபுரம் கிராமத்தை சேர்ந்த செங்கோட்டையன் ஆகிய இருவரும் 3 மாதத்துக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

இந்த விபத்தால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது. இதன் காரணமாக நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் நேற்று 5 பேரை கைது செய்தனர். இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அந்த கிராமங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் மூக்கனூர் மற்றும் சிவபுரம் ஆகிய இரண்டு கிராமங்களில் கலவரம் ஏற்படாமல் இருக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பினர் மோதிகொண்ட சம்பவத்தால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.