சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்து வந்தே பாரத் என பெயர் வைத்துள்ளதாக மேற்கு வங்க அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை கடந்த மாதம் 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கல் எறிந்து தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் திருணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்து வந்தே பாரத் என பெயர் வைத்துள்ளனர் என மேற்கு வங்க அமைச்சர் உதயான் குஹா விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான இவர், இந்த ரயில் ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரிக்கு செல்ல ஏன் 8 மணிநேரம் ஆகிறது. பிற ரயில்களும் இதே நேரத்தில் தானே அங்கு செல்கிறது என்று கூறியுள்ளார்.
newstm.in