100 நாள் வேலை திட்டம் – புகார் எண் அறிவிப்பு!!

100 நாள் வேலை திட்டத்தில் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் (Ombudsman) பணி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக பால சுந்தரம் என்பவர் கரூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய கைப்பேசி எண் 8925811311 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected]. பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் குறைகள் தொடர்பாக இவரை தொடர்பு கொள்ளலாம்.

திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.