
பாஜக சிறுபான்மை அணி பிரிவின் தலைவர் மருத்துவர் டெய்சி சரணின் மகள் ஷர்மிகா ஒரு சித்த மருத்துவர். இவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்தும் வருவார்.
அந்த வகையில், கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டால், ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும், நம்மைவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என்று பேசினார்.

கடந்த சில நாட்களாகவே ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசணைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இணையத்தில் அவர் வெளியிட்டு இருந்த சிலர் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் வந்தது.

இந்நிலையில் புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
newstm.in