கண்ணீர் விட்டு அழுத சமந்தா… ஏன் தெரியுமா?

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தா கலந்து கொண்டதால், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் இயக்குநர் குணசேகரன் பேசும்போது, இப்படத்தின் உண்மையான ஹீரோ சமந்தாதான் என்று பாராட்டினார். அவரது பேச்சைக்கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.

சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், ஆனால் தயாரிப்பாளர் நீலிமா சமந்தாதான் நடிக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய சமந்தா, தனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை என்று கூறினார். சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.

மேலும் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இளவரசர் பரதன் கதாப்பாத்திரத்தை அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா ஏற்றுள்ளார்.

இந்த திரைப்படம் பிப்ரவரி 17ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 3டியிலும் இந்தப் படத்தை திரையரங்குகளில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.