தமிழகத்தில் 55 மறுவாழ்வு மையங்கள்.. ஐகோர்ட்டில் அரசு தகவல்..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு, கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என வெங்கடேசன் நீதிமன்றத்தில் பரிந்துரை செய்திருந்தார். அதோடு மனநலம் பாதித்தவர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை இதுவரை அமல்படுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும்‌ 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன், முழுமையாக குணமடைந்தவர்களுக்காக மதுரை, திருச்சி, ராமநாதபுரம், வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 இல்லங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மனநலம் குன்றியவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை அமல்படுத்துவது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.