
துணிவு, வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நாளை ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் தியேட்டர் ஒன்றில் ஒரு ஸ்கிரீனில் எந்தப்படத்தை திரையிடலாம் என்று ரசிகர்கள் டாஸ் போட்டு பார்த்துள்ளனர்.
தியேட்டரில் மூன்று ஸ்கிரீன்கள் உள்ள நிலையில் தலா ஒரு ஸ்கிரீனில் துணிவு, வாரிசு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் மீதமுள்ள ஒரு ஸ்கிரீனில் எந்தப்படத்தை திரையிடுவது என்று போட்டி ஏற்பட்டது.

இதனையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் டாஸ் போட்டு முடிவு செய்தனர். அதில் அஜித் ரசிகர்கள் வெற்றி பெற்றனர். துணிவு படம் 3ஆவது ஸ்கிரீனில் திரையிடப்பட உள்ளது. இணையத்தில் பரவும் தகவலின்படி, அது அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டர் என தெரிகிறது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவின் உண்மைத்தன்மை என்னவென்பது தெரியவில்லை என்றாலும் தற்போது தியேட்டர்களின் நிலைமை இதுதான் என ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in