திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு ஆகியவற்றை முன்னிட்டு 11 நாட்களில் ஏழுமலையானுக்கு 42 கோடியே 88 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 11 நாட்களில் ஏழுமலையானை 7,08,000 பக்தர்கள் தரிசித்தனர். அவர்களில் 2,10,000 பேர் தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டு கொண்டனர்.
மேலும் கடந்த 11 நாட்களில் ஏழுமலையானுக்கு 42 கோடியை 88 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் மூடப்பட்டது.
newstm.in