மதுரை விமான நிலையம் உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவையில் தற்போது இலங்கை துபாய், சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகிறது.
தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இரவு நேர உள்நாட்டு விமான சேவையுடன் வெளிநாட்டு விமான சேவைகள் துவங்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய நகர விமான நிலையங்களுக்கும் 24 மணி நேர சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையம் 24×7 செயல்படும். அதற்காக விமான நிலைய நிர்வாகம் தயாராகி வருகிறது.
newstm.in