
இமாசல பிரதேசத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இமாசல பிரதேசத்தின் தர்மசாலா நகரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் சம்பா என்ற பகுதியில் இன்று காலை 5.17 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது

இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சற்று அச்சமடைந்தனர். இதனால் பெரிய அளவிலான இழப்புகள் எதுவுமில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. காலநிலை மாற்றமே இது போன்ற இயற்கை பேரிடர்களுக்கு காரணம் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in